மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன்னி லியோன் புகைப்படத்துடன் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்.!
கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு (TET-2022) கலந்து கொண்ட ஒரு விண்ணப்பதாரரின் ஹால் டிக்கெட்டில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவு அட்டையில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சன்னி லியோன் புகைப்படத்துடன் வெளியான அனுமதி அட்டையின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, இச்சம்பவம் குறித்து கர்நாடக கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விண்ணப்பதாரரின் கணவர் தனது நண்பரிடம் சொல்லி விண்ணப்பித்துள்ளார். அந்த நண்பரே தவறான புகைப்படத்தை வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.