மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மௌனம் மிக ஆபத்தானது! காக்க..காக்க.. சுற்றுச்சூழல் காக்க! தம்பி கார்த்தியை தொடர்ந்து சீறும் நடிகர் சூர்யா!
EIA 2020 என்ற புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழவன் அறக்கட்டளை சார்பாக நடிகர் கார்த்தி நேற்று சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர்,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவு அறிக்கை இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக தோன்றுகிறது. மலைகளும், ஆறுகளும், பல்வகை உயிரினங்களும் நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலை அமைப்பது, இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பது நிச்சயம் வளர்ச்சி அல்ல. அதனை வளர்ச்சிக்கு அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் முயற்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
இந்த வரைவு அறிக்கையில், பல முக்கிய திட்டங்களே மக்களின் கருத்து கேட்பு, மற்றும் ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கின்ற ஒரு சரத்தே நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளையும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது இந்த வகையில் நியாயமான சட்டமாக இருக்க முடியும் என பல கேள்விகளை எழுப்பி கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020 https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020
அதை சுட்டிகாட்டி நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.” என்று கூறி #EIA2020” என்ற ஹேஷ்டேக் உடன் தனது கருத்தை பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.