மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம்..! இறப்பதற்கு முன் 14 சிம் கார்டுகளை மாற்றினாரா..? மிரளவைக்கும் காரணம்.?
இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நாள்தோறும் புது புது திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இளம் நடிகர் சுஷாந்த் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதியில் இருந்து 14-ஆம் தேதி வரை, அதாவது ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சுஷாந்த் சிங் வாங்கிய சிம் கார்டுகள் எதுவும் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவற்றில் ஒன்று அவருடைய நண்பர் மற்றும் நடிகர் சித்தார்த் பிதானியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்ற என்ன காரணம்? யாரேனும் அவருக்கு போன் செய்து மிரட்டினார்களா? அந்த மிரட்டலுக்கு பயந்துதான் சுஷாந்த் சிங் தற்கொலையோ செய்துகொண்டாரா என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.