#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே மனைவியின் நடத்தையில் சந்தேகம்... பிறந்த பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிய கொடூர தந்தை..!
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் சாவர்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் க்ரிஷ் - பிரதிக்சா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனைவி பிரதிக்சாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் கிரிஷ்.
இதற்கிடையில் பிரதிக்சா கர்ப்பமாகி நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கூட க்ரிஷ் பிரதிக்சாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பிரதிக்சாவிற்கு ஆண் குழந்தை பிறக்கவே குழந்தையை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்த கிரிஷ் தனது மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த க்ரிஷ் பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் குழந்தையை தரையில் தூக்கி வீசியுள்ளார்.
மேலும் கிரிஷ் குழந்தையை தூக்கி வீசியதை கண்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு வந்த போலீசார் கிரிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.