மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால்... இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவன்..!!
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை இரும்பு கம்பியால் கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த சூளூர்பேட்டையில் வசித்து வருபவர் செங்கையா (30), இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (25). இவர்களுக்கு கிருத்திகா மற்றும் விக்னேஷ்வர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி உமாமகேஸ்வரியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து, இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், உமாமகேஸ்வரி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், தனது மனைவியை பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு செங்கையா மாமனார், மாமியாரிடம் கேட்டுள்ளார். எனவே உமாமகேஸ்வரி குழந்தைகளை தாய் வீட்டிலேயே விட்டு விட்டு செங்கையாவுடன் சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த செங்கையா இரும்பு கம்பியால் உமாமகேஸ்வரியின் தலையின் பின்புறத்தில் அடித்துள்ளார். இதில், உமாமகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, செங்கையா மனைவியை கொலை செய்ததாக கூறி ஸ்ரீகாளஹஸ்தி நகர காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உமாமகேஸ்வரி சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.