மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Viral: பெண்நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் செய்துவைத்த தம்பதியினர்.. உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து கோலாகல திருமணம்..!!
குழந்தை இல்லாத தம்பதியினர் இந்து முறைப்படி தங்களின் நாய்க்கு திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியினர், கோவில்களுக்கு சென்று அங்குள்ள கால்நடைகளுக்கு உணவளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் நாய் இவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் நாயை வளர்க்க முடிவு செய்த தம்பதியினர், அதற்கு "ஸ்வீட்டி" என்று பெயரிட்டனர்.
மேலும் தங்களது குழந்தை போலவே இத்தனை வருடங்களாக கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது நாய்க்கு இந்து முறைப்படி திருமணம் செய்ய நினைத்து, ஆண் நாய் ஷேருவை தேர்ந்தெடுத்து தனது உறவினர்கள் சுமார் 100 பேருக்கு அழைப்பிதழ் அளித்துள்ளனர்.
மேலும், ஸ்வீட்டி - ஷேருவின் திருமணத்தை தங்கள் பிள்ளைகளின் திருமணத்தைப் போல கோலாகலமாக நடத்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.