மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஆட்குறைப்பு.. கொரோனாவால் பறிபோகும் வேலைவாய்ப்பு.. ஸ்விகி அதிரடி அறிவிப்பு!
பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி மீண்டும் 350 பேரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
இருப்பினும் மக்கள் உணவகங்களில் இருந்து உணவுகளை வாங்கி சாப்பிட அச்சப்படுகின்றனர். இதனால் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் வருமானம் பாதியாக குறைந்துள்ளது.
இதனால் அந்நிறுவனம் ஏற்கனவே 1100 பேரை வேலையிலிருந்து நிக்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் 350 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் உழியர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.