#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றதைபோல், கொரோனாவிலிருந்தும் விடுதலை பெறுவோம்! தமிழிசை சௌந்தரராஜன்.
நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வீர சரித்திரங்களை நினைவு கூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாகவும் நிறைவேற்றி வருகிறார்கள்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...#IndependenceDay pic.twitter.com/HWQZojvcgy
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 14, 2020
அந்நியர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றதை போன்று கொரோனாவிலிருந்து விடுதலை பெறுவோம். அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.