கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் பிரச்சினை
தமிழக மீனவர்கள் தங்களுடைய எல்லைக்குள் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை & புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிவிப்பு; விபரம் இதோ.!
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
சமீபத்தில் கூட இலங்கை கடற்படையினர் தாக்கியதில் தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கைது மீனவர்கள்
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஜூலை 21ஆம் தேதி 10 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அதேபோல் மற்றொரு படகில் ஜூலை 23ஆம் தேதி 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் 2 விசைபடுகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை காங்கேயம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவம் தமிழக மீனவர்களையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் சென்னையை புரட்டியெடுத்த கனமழை.!