மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகள் கண்முன்னே ஆசிரியர் அரங்கேற்றிய கொடூரம்.! துடிதுடித்து உயிரை விட்ட மனைவி!! பகீர் சம்பவம்!!
மகள் கண்முன்னே ஆசிரியர் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி நவாடா பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நபருக்கு திருமணமாகி 9 வயதில் ஒரு மகள் உள்ளார். ஆசிரியருக்கும், அவரது மனைவி இருவருக்கும் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெறும்.
அவ்வாறு நேற்று மாலையும் ஆசிரியருக்கும், அவரது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியுள்ளது. இந்த நிலையில் சண்டை முற்றிய நிலையில் கடும் ஆத்திரமடைந்த ஆசிரியர் கத்தியை எடுத்து தனது மகள் கண்முன்னே மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். பின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதனைக் கண்ட அவர்களது மகள் கதறித் துடித்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அந்த பெண் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாகிய ஆசிரியரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.