திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளி மாணவிக்கு தாலிக்கட்டி குடும்பம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது.!
ஆந்திரா மாநிலம் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக 46 வயதான காமராஜர் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் கடந்த 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அப்போது மாணவிக்கு செல்போன் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாலி கட்டி குடும்பம் நடத்தியுள்ளார்.
இதனிடையே அந்த பள்ளி மாணவி அவரிடமிருந்து தப்பி சென்று தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து ஆசிரியர் மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்ஸ் சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பள்ளி மாணவிக்கு ஆசிரியர் தாலிக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.