மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவிகளின் டேட்டிங் ஆஃப் ஐடியை கூறிய ஆசிரியை; வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் சமீனா தல்வாணி என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வகுப்பில் பயின்று வரும் சில மாணவிகளின் டேட்டிங் ஆப் தொடர்பான தனிப்பட்ட ஐடிகளை மாணவ - மாணவிகள் முன்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஆசிரியையின் செயல்பாடுகளை தட்டிக்கேட்க இயலாமல் தவித்துள்ளனர். இந்த விஷயம் பெண்கள் நலத்துறைக்கு தெரியவரவே, விசாரணை நடத்தினர்.
தற்போது இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுள்ள காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.