மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேயை விரட்ட இளம் பெண்ணை எரியும் தீக்குழியில் நிற்க வைத்த மந்திரவாதி..! இறுதியில் நிகழ்ந்த சோகம்..!
பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியால் தீக்குழியில் நிற்க வைக்கப்பட்ட இளம்பெண் தீயில் விழுந்த விபத்தில் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் விக்ரா பாத் மாவட்டத்திலுள்ள கல்லூரியில் படித்து வருபவர் 19 வயதான இளம் பெண் அந்தப் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று பேயோட்டும் படியும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனால் அந்தப் பெண்ணுடைய பெற்றோர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மந்திரவாதி உங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது அதை ஓட்டவும் அந்தப் பெண் குணமடையவும் தீக்குழியில் இறங்குதல் போன்ற சில பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது என்று கூறினார். அந்த மந்திரவாதியின் பேச்சை கேட்ட பெண்ணின் பெற்றோர் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அதன்படி நிலக்கரியால் எரியூட்டப்பட்ட தீக்குழியில், அந்த பெண்ணை நடக்க வைத்துள்ளனர். நெருப்பு தனலின் வெப்பத்தால் அந்த பெண் மயக்கமடைந்து தீயில் விழுந்துள்ளார். ஆனாலும் அருகில் நின்றுகொண்டிருந்த அந்த மந்திரவாதி தீ குழியில் விழுந்த அந்த பெண்ணை மீண்டும் எழுந்து நிற்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து மந்திரவாதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.