மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்து 40 நாட்களேயான குழந்தைக்கு நேர்ந்த சோகம்; மூக்கில் எலி கடித்து பரிதாப பலி.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர் கர்னூல் மாவட்டம், நாகனூல் கிராமத்தில் வசித்து வருபவர் சிவா. இவரின் மனைவி காலா. தம்பதிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பின் தனது தாயின் வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் லட்சுமி உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில், குழந்தையின் மூக்கை எலி கடித்ததாக தெரியவருகிறது.
உடனடியாக குழந்தையை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பெற்ற குழந்தை நேற்று வீட்டிற்கு திரும்பியுள்ளது.
இதனிடையே, மீண்டும் எலி குழந்தையின் மூக்கை கடிக்கவே, அதிக இரத்தம் வெளியேறியதாக தெரியவருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.