மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனின் தோழியை திட்டமிட்டு பலாத்காரம் செய்த கொடூரம்; கல்லூரி மாணவிக்கு புதருக்குள் நடந்த பயங்கரம்..!!
தனது ஆருயிர் நண்பன் நீதி தவறமாட்டான் என்ற நம்பிக்கையில் இருந்த தோழனுக்கு துரோகம் செய்த கயவனின் அதிர்ச்சி செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹனம்கொண்டா பகுதியில் வசித்து வருபவர் அன்வேஸ். இவரின் நண்பர் அகில். அன்வேஸ் தனது காதலியுடன் ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறி இருக்கிறார். அகில் தனது தோழி கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவரையும் கோவிலுக்கு அழைத்து வருவதாக கூறியுள்ளார்.
இவர்களின் திட்டப்படி அன்வேஸ் மற்றும் அவரின் காதலி, அகில் மற்றும் அவரின் தோழியான கல்லூரி மாணவி ஆகியோர் சேர்ந்து கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். கோவிலில் இருந்து கல்லூரிக்கு திரும்பியபோது, அன்வேஸ் தனது காதலியை வேங்கடப்பூர் பகுதியில் இறக்கி விட்டுள்ளார்.
பின், அகில் மற்றும் அவரின் தோழி காரில் பயணம் செய்துள்ளனர். கோமாடிப்பள்ளி சோதனைச்சாவடி பகுதியில், அங்கிளின் தோழி இயற்கை உபாதை கழிக்க புதருக்கு சென்றுள்ளார். அவரது அழகை கண்டு மயங்கிய அன்வேஸ், அவரை அடைய எண்ணியுள்ளார். இதனையடுத்து, நண்பன் அகிலை அங்கிருந்து தண்ணீர் பாட்டில் வாங்கிவர அனுப்பி வைத்துள்ளார்.
அகில் விபரீதம் புரியாமல் நண்பனின் மீது இருந்த நம்பிக்கையில் தண்ணீர் பாட்டில் வாங்கிவர சென்றுள்ளார். சமயத்தை தனதாக்கிய அன்வேஸ், புதருக்கு சென்று கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இருவரும் காரில் வந்து இருந்த நிலையில், கல்லூரி மாணவி முகம் மாறி இருப்பதை அகில் கவனித்துள்ளார்.
அவர் கேட்டதற்கு எதுவும் பதில் கூறாத நிலையில், ஏதேனும் கோபமாக இருக்கலாம் என எண்ணி கடந்து சென்றுள்ளார். பின் கல்லூரி மாணவி விடுதியில் இறக்கிவிடப்பட, அவர் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறி கதறி இருக்கிறார். அதிர்ந்துபோன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி அன்வேஷை கைது செய்தனர்.