மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்சூரன்ஸ் பணத்திற்காக அரசு ஊழியர் செய்யும் காரியமா இது?.. ஆன்லைன் ரம்மியில் தோற்று மனைவியுடன் கம்பி எண்ணும் பரிதாபம்.!
தனது கடனை ஈடு செய்ய இன்சூரன்ஸ் பணத்திற்காக இறந்ததாக நாடகமாடிய அரசு ஊழியர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வேங்கடாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மா நாயக். இவர் தெலுங்கானா மாநில தலைமை செயலகத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அடிமையாக இருந்தவர் ரூ.1 கோடி வரையில் இழந்துள்ளார்.
இதனால் தனது இன்சூரன்ஸ் பணத்தை பெற திட்டமிட்ட தர்மா நாயக், குடும்பத்துடன் சேர்ந்து அதற்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரி 4ம் தேதி தர்மா நாயக் கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறி கதறியழுத தர்மா நாயக்கின் மனைவி, இன்சூரன்ஸ் பணத்தை பெற திட்டமிட்டுள்ளார்.
அதற்கான முயற்சியையும் அவர் கடந்த சில நாட்களாக எடுத்த நிலையில், தர்மாவின் மனைவிக்கு கணவர் தொடர்பு கொண்டு பேசியதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனால் காப்பீடு தொகையை வழங்கும் அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்த விஷயம் தொடர்பாக நடந்த விசாரணையில் ஆன்லைன் ரம்மியால் தர்மா நாயக் கடனாளி ஆகியதும், கடனை ஈடு செய்வதற்கு இன்சூரன்ஸ் தொகையை பெற இறந்ததாக நாடகம் ஆடியதும் அம்பலமானது. இதனையடுத்து, தர்மா நாயக், அவரின் மனைவி ஆகியோரை அதிகாரிகள் மும்பையில் வைத்து கைது செய்தனர்.