திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பட்டம் பறந்து பறிபோன உயிர்; மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் பரிதாப பலி.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஏத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் தன்ஷிக் (வயது 11).
சிறுவன் நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்.
அச்சமயம் சிறுவனின் பட்டம் மின்சார கம்பிகள் மீது நேரடியாக பட, சிறுவனின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுவனை விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.