மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"காதலிக்கும்போது வரதட்சணை வேண்டாம்; நிக்கா முடிந்தால் வேண்டும்" - 3 குழந்தைகளின் தாய் தற்கொலை, பிஞ்சுகள் கொலை.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜண்ணா சிர்சில்லா மாவட்டம், நடு மனையர் நீர்த்தேக்கத்தில் பெண்ணொருவர் தனது மூன்று குழந்தைகளோடு நேற்று குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில், இந்த செயலில் ஈடுபட்ட பெண்மணி நேசா என்ற ராஜிதா (வயது 30) என்பது உறுதியானது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் வகுப்பில் பயில கரீம் நகர் பகுதிக்கு வந்த சமயத்தில், அங்கு வாழைப்பழம் விற்பனை செய்த முகமது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின்போது அமைதியாக இருந்த கணவன் மற்றும் அவரது வீட்டார், திருமணத்திற்கு பின் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிய வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை. கணவர் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், நாம் உயிரை மாய்த்து விடலாம் என்று முடிவு செய்த அவர், தனது குழந்தைகளுடன் நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.