மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் மார்க்கெட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமி: குளிர்சாதன பெட்டியை திறந்ததும் நடந்த பயங்கரம்.!
குழந்தைகளை எங்கு அழைத்து சென்றாலும், வீட்டில் இருந்தாலும் அவர்களை ஒருகணம் கவனிக்க தவறினாலும் நடக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத், நந்திப்பேட் பகுதியைச் சார்ந்தவர் ராஜசேகர். இவரின் மகள் ருசிதா (வயது 4).
சம்பவத்தன்று அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு தனது மகளுடன் ராஜசேகர் சென்றுள்ளார். அவர் குளிர்சாதன பெட்டியில் உள்ள பொருட்களை பார்த்தவாறு இருந்தார்.
அச்சமயம், அவரின் மகள் சாக்லேட் சாப்பிட ஆசைப்பட்டு, குளிர்சாதன பெட்டி ஒன்றை தெரிந்துள்ளார்.
அப்போது, திடீரென குளிர்சாதன பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கவே, குழந்தை பரிதாபமாக நிகழ்விடத்திலேயே மின்சார தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத தந்தை பொருட்களை வாங்குவதிலும் மும்மரமாக இருந்த நிலையில், பின்னர் மகளை கவனித்துபோது மின் தாக்குதலால் மூர்ச்சையாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அலறியபடி மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க, அங்கு சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
ચેતવતો કિસ્સો...
— DINESH CHAUDHARY (@dinesh9904748) October 2, 2023
તેલંગાણા: સુપરમાર્કેટમાં રેફ્રિજરેટર ખોલતા બાળકને લાગ્યો વીજ કરંટ, ઘટનાસ્થળે જ મોત#Telangana #Child #electrocuted #refrigerator #supermarket pic.twitter.com/VBQHxrtoRY