மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 பெண்களுடன் 4 வாடிக்கையாளர்கள்.. திரைத்துறை முக்கிய புள்ளிகளுக்கு பெண்கள் சப்ளை?.. விபச்சார புரோக்கராக அரசியல்கட்சி பிரமுகர் கைது.!
பெண்களை பிணையமாக வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த அரசியல்கட்சி பிரமுகர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை பதிவு செய்துள்ளது. முதற்கட்ட விசாரணையிலேயே பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ராம் நகர் காங்கிரஸ் தலைவர் அகில் பஹில்வான். இவரின் தலைமையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பல் செயல்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வங்கதேசம் நாட்டை சேர்ந்த 16 பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ள தகவலும் அம்பலமானது.
இவர்களுடன் தங்கியிருந்த 4 வாடிக்கையாளர்கள், 2 புரோக்கர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகத்திடமும் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான அகில், உள்ளூரில் செல்வந்தர் போல வலம்வந்துள்ளார்.
வங்கதேசம் உட்பட வெளிநாட்டு சிறுமிகள், பல மாநிலங்களில் இருந்து பிழைக்க வரும் பெண்கள் என பலரையும் வேலைவாங்கித்தருவதாக இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். இவர் திரைத்துறையை சேர்ந்தவர்களுடன் நட்பு வட்டாரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் பெண்கள் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனரா? என விசாரணை நடந்து வருகிறது. 16 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கும்பல், நாளொன்றுக்கு 20 முதல் 30 அழைப்புகளை பெற்று இருக்கிறது.