மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடன் விவகாரத்தில் மாமியார் சுட்டுக்கொலை: வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்.. வெறிச்செயலில் ஈடுபட்ட மருமகன்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல், ஹனுமண்கொண்டா, குண்டலசிங்கரம் பகுதியை சேர்ந்தவர் கமலம்மா (வயது 58). இவரின் மகள் மதுமிதா. இவரின் கணவர் பிரசாத். இவர் கோட்டப்பள்ளி காவல் நிலையத்தில் காவலராக வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், ப்ரசாத்திற்கும் - அவரின் மாமியார் கமலாம்மாவிற்கும் இடையே பணம் தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. ரூ.4 இலட்சம் கடன் வாங்கிய பிரசாத், அதனை திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது.
பணத்தை மீண்டும் தரும்படி மாமியாரும் பலமுறை மருமகனிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வேலையை முடித்துவிட்டு மாமியாரின் வீட்டிற்கு வந்த பிரசாத், அங்கு வாசலில் மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
மாமியாரை கொலை செய்து அங்கேயே பிரசாத் இருந்த நிலையில், துப்பாக்கிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் வந்த கமலாம்மாவின் உறவினர்கள் பிரசாத்தை அடித்து நொறுக்கினர். தாயின் உடலை பார்த்து மகள் மதுமிதா கதறி அழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கமலம்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.