இன்ஸ்டாவில் காதல் மழை, மெசெஞ்சரில் காம வலை.. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு..!



Telangana Warangal Software Engineer Ajay Sexual Abused 100 Woman Trap Instagram Account

சமூக வலைத்தளத்தில் பழகி 100 க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சாப்டவேர் எஞ்சினியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியை சார்ந்தவர் அஜய் (வயது 30). இவர் ஹைதராபாத் நகரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலமாக பெண்களிடம் பழகி வந்த அஜய், அவர்களிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பேசி இருக்கிறார். 

இதனை நம்பிய பெண்களும் அவர்களின் புகைப்படத்தை அனுப்பி வைக்கவே, அதனை வர்ணித்து ஆபாசமாக பேசி இருக்கிறார். இவரது பேச்சுக்களில் விழும் பெண்களிடம் மேலும் ஆசையை தூண்டும் வகையில் பேசி, அவர்கள் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் மற்றும் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்ப வைத்துள்ளார். 

இந்த புகைப்படத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அஜய், நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பெண்களை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அஜயின் வலையில் பெரும்பாலும் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள், அரசுத்துறை பெண் பணியாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் விழுந்துள்ளனர். 

Telangana

அஜயின் பிடியில் சிக்கி தப்பிக்க வழி தெரியாமல் பெண்கள் விழிபிதுங்கிய நிலையில், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து உல்லாசமாக இருந்து வந்துள்ளான். பலரும் அவமானத்திற்கு பயந்து புகார் தராத நிலையில், இதனை வாடிக்கையாக வைத்து பல பெண்களிடம் அத்துமீறி இருக்கிறான். 

அஜயால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஐதராபாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அஜயின் சுயரூபம் உறுதியாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து, அஜயை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.