#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தெலுங்கானாவின் தேசபக்தி... மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒலித்த தேசிய கீதம்.. மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு..!
தெலுங்கானா முழுவதும் ஒரே நேரத்தில் ஒலித்த தேசிய கீதம்.
ஐதராபாத், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு தேசிய கீதம் பாடப்பட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் என்று ஒரே சமயத்தில் ஒலித்த 'ஜன கண மன' கீதத்தால் மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது. மேலும் முக்கிய இடங்கள் அனைத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உணர்ச்சி பூர்வமான நிகழ்வாக இருந்தது.
ஐதராபாத்தில் நடந்த தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அமைச்சர்கள், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய கீதம் பாடுவதற்கு முன், நாட்டின் முதல் பிரதமர் நேருவின் சிலைக்கு சந்திரசேகர் ராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தெலுங்கானா முழுவதும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும், மொத்தம் 28 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் இருக்கும் சிறைகள் மற்றும் வயல்வெளிகளிலும் தேசிய கீதம் ஒலித்தது. ஐதராபாத் மெட்ரோ ரெயில் இயக்கமும் 58 வினாடிகளுக்கு நிறுத்தப்பட்டது, பயணிகளும், பணியாளர்களும் ஒன்றாக தேசிய கீதம் பாடினர். நிஜாமாபாத் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தில் பங்கேற்றவர்களும் எழுந்து நின்று தேசிய கீதம் பாடியது தேசபக்தியை ஏற்படுத்தியது.