மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் தான் கடவுள்.. 2 மனைவிகள், 5 தலை பாம்பு படுக்கை.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
நான்தான் கடவுள் என மக்களை ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சிப் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலத்தில் ஆசிரமம் ஒன்று நடத்தி வந்துள்ளார்.
அங்கு நானே கிருஷ்ணர் என்றும், நானே விஷ்ணு என்றும் கடவுளின் மறு உருவம் என கூறி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வந்துள்ளார். இதில் ஆசிரமத்தை நடத்தி வரும் சுரேஷ்க்கு 2 மனைவிகள் மற்றும் 5 தலை பாம்பு படுக்கை அமைத்து தனது மனைவிகளுக்கு ஸ்ரீதேவி, மூதேவி என பெயர் வைத்துள்ளார்.
இந்த ஆசிரமத்திற்கு வரும் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிவதாக அப்பகுதி மக்களிடையே சில தகவல் பரப்பியுள்ளனர். அதன் காரணமாக அந்த ஆசிரமத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமியார் சந்தோஷை பார்க்க பக்தர்கள் குவிந்தனர்.
இதில் கடந்த 3 நாட்களாக சாமியார் குறித்து அந்த பகுதியில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாமியாரை பார்க்க அதிக கூட்டம் கூடியுள்ளது. அதன் காரணமாக கடவலா ராய்ச்சூர் சாலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொடி தொட்டி போலீசார் சாமியாரான சந்தோஷ் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.