தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Watch: குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம்; சிறுவன் பலி., தலைதெறிக்க ஓடிய சுற்றுலாப்பயணிகள்.!
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கொடைமழையானது பெய்து வருகிறது. விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் மழையினால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளிலும் நீர் வரத்து ஏற்பட்டது.
குற்றாலம் அருவிகளில் வெள்ளம்
இதனால் வெள்ளிக்கிழமை மற்றும் கோடை விடுமுறையாக இன்று, பல ஊர்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகைதந்து வெவ்வேறு அருவிகளில் நீராடி மகிழ்ந்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் வேளையில் சுற்றுலா பயணிகள் குளித்துக்கொண்டு இருந்தபோதே நீர் வரத்து திடீரென அதிகரித்தது.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் வெளுத்தது வாங்கும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்
அருவியில் குளித்துக்கொண்டு இருந்த சுற்றுலாப்பயணிகள் பலரும் அலறியபடி அங்கிருந்து வெளியேற, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சிறுவன் அஸ்வின் (வயது 17), நீரின் பிடியில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். நீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுவனை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.
குளிக்க தற்காலிக தடை
குற்றாலத்தில் வெள்ளம் குறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதித்து உத்தரவிட்டனர். நிகழ்விடத்திற்கு நேரில் சென்றும் பார்வையிட்டனர். இதனிடையே, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப்பயணிகள் பதறியபடி ஓட்டம்பிடித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: மதுரை, தேனி உட்பட 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.!
சீறி பாயும் வெள்ளம்
— Dhanalakshmi (@DhanalakshmiOff) May 17, 2024
பயந்து ஓடும் மக்கள் ....
பழைய குற்றாலம் pic.twitter.com/ZT60PV1yjp