பதற்றம்.. திடீரென்று ஏற்பட்ட மேகவெடிப்பால் வெள்ள பெருக்கு.. பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு..!



Tension.. Sudden cloudburst causes flooding.. Death toll rises to 40..!

இம்மாத தொடக்கத்தில் சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக டீஸ்டா நதியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ள பெருக்கல் சிக்கி 75 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இங்கு வாழ்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Sikkim

இதனையடுத்து வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்திய ராணுவத்தினர் மீட்பு பணி மற்றும் சீரமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மேகவெடிப்பின் காரணமாக உருவான வெள்ள பெருக்கில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்து உள்ளது.