தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அறக்கட்டளைகளில் உள்ள கடவுளின் பணத்தை வசூலிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு 10ஆம் வகுப்பு மாணவர் கடிதம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீடுகளிலேயே முடங்கியுள்ள 130 கோடி இநியர்களின் நிதி நெருக்கடியினை போக்க அனைத்து மதம் சார்ந்த அறக்கட்டளைகளில் உள்ள 80% கடவுளின் பணத்தை பிரதமர் மோடி வசூலிக்க வேண்டும் என மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால் நாட்டில் சிறு, குறு மற்றும் பெருந் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து வருகிறது.
இந்த சூழலை சமாளிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நண்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் டேராடூனில் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மருத்துவ தம்பதியினரின் மகன் அபிநவ் குமார் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் இந்தியாவில் அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம். அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் வேலைவாய்ப்பின்மையும் 130 கோடி இந்தியர்களின் வருமானமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க அரசு பெரும் தொகையினை செலவு செய்து வருகிறது. இதே சூழல் நீடித்தால் அரசின் கஜானா சில நாட்களில் காலியாகிவிடும். இதனால் எந்தவித மத பாகுபாடின்றி அனைத்து மதம் சார்ந்த அறக்கட்டளைகளில் உள்ள 80% கடவுளின் பணத்தினை நாட்டு மக்களுக்காக தர வேண்டி பிரதமர் மோடி ஆணை பிறப்பிக்க வேண்டும்.
கடவுளின் இந்த பணத்தால் கடவுளின் பிள்ளைகள் காப்பாற்றப்பட்டால் நம்மையும் கடவுள் நிச்சயம் ஆசீர்வதிப்பார். மனித நேயத்தின் மீது நாம் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்போம் என அந்த மாணவர் கடிதத்தில் எழுதியுள்ளார். பிரதமருக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் அனைத்து கடவுள்களின் பெயர்களையும் காப்பியில் வைத்துள்ளார்.