மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில் நிலையத்தில் பயங்கரம்... சிறுவனை வன்கொடுமை செய்த காவல்துறை அதிகாரி... பரபரப்பு வீடியோ.!
உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த ரயில்வே காவலர் ஒருவர் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனிடம் கடுமையாக நடந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் டெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் சிறுவன் ஒருவன் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே கான்ஸ்டபிள் ஒருவர் அந்த சிறுவனிடம் கடுமையாக நடந்துள்ளார்.
அவர் சிறுவனை கால்களால் எட்டி உதைத்து எழுப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. ரயில்வே நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் இந்த வீடியோவை எடுத்து தனது சமூக வலைதளத்தின் மூலம் பரப்பு இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த காவலருக்கு எதிரான கண்டனங்கள் நாடெங்கிலும் எழுந்துள்ளது. அந்தக் காவலர் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.