மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தக்காளி விவசாயி அடித்துக் கொலை... நடந்தது என்ன.? காவல்துறை தீவிர விசாரணை.!
ஆந்திர மாநிலத்தில் தக்காளி விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜசேகர். தக்காளி விவசாயியான இவர் 5 ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பயிர் செய்திருந்தார். தற்போது நிலவிவரும் தக்காளி விலை ஏற்றத்தால் 30 லட்ச ரூபாய் வரை சம்பாதித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கொலை பணத்திற்காக நடந்ததா அல்லது இவருக்கு 30 லட்சம் தர வேண்டிய வியாபாரிகள் ராஜசேகரை கொலை செய்திருக்கிறார்களா என்று பல்வேறு கோணங்களில் ஆந்திர போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தக்காளி விலை ஏற்றும் நிலவும் இந்த சூழலில் தக்காளி வியாபாரி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.