தாய்லாந்து வேலை என ஆசைவார்த்தை கூறுகிறீர்களா?; மக்கள் உஷார்.. மத்திய அரசு எச்சரிக்கை...!



Thailand Job Fraud Central govt Warning

வெளிநாட்டில் வேலை என்று கூறினால் அது சற்று கலக்கமாகத்தான் இருக்கும். முன்பின் தெரியாமல் முதல் முறை செல்லும் பலரும் வேலைக்கு நல்லபடியாக சென்று சேரும் வரை இதனையே கூறுவார்கள். இவர்களில் பலர் ஏமாற்றப்படும் நிகழ்வும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில், சமீபமாகவே தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் பலரும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதாவது, தாய்லாந்து நாட்டில் ஐ.டி வேலை என்று கூறி அழைத்து செல்லப்பட்டவர்கள் மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். 

India

மியான்மருக்கு இந்தியர்களை கடத்தி செல்லும் கும்பல், அவர்களை சட்டவிரோத செயலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். அவ்வாறு செயல்படாதவர்களை மிரட்டுவதாகவும் தெரியவருகிறது. இதுகுறித்த புகார்கள் மத்திய அரசுக்கு தெரியவரவே, தாய்லாந்து நாட்டிற்கு வேலைக்கு என இந்தியர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்போது வரை ஏமாற்றப்பட்டு தாய்லாந்தில் தவித்து வரும் இந்தியர்களை மீட்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தாய்லாந்துக்கு சென்ற தமிழர்கள் தங்களை காப்பாற்றக்கூறி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.