திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சர்வதேச அளவிற்கு நவீனமயமாகும் 4 ரயில் நிலையங்கள்! கைவிடப்பட்ட தமிழகம்
இந்தியாவில் உள்ள 4 ரயில் நிலையங்களை தேர்வு செய்து சர்வதேச அளவிற்கு விமான நிலையங்களை போல தரம் உயர்த்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதில் சென்னை இடம்பெறவில்லை.
இந்தியாவை பொறுத்தவரை ரயில் நிலையங்கள் என்றாலே குப்பைகள் நிறைந்து சுகாதாரமற்று தான் காணப்படுகிறது. ரயில்வே துறை என்ன தான் செலவு செய்தாலும் மக்களும் அதற்கு ஒத்துழைப்பதில்லை. இதற்கு காரணம் ரயில் நிலையங்களின் தரம் உயர்த்தப்படாதது தான்.
நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் பல ரயில் நிலையங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக தான் உள்ளது. அவற்றை புதிய தொழில்நுட்பத்துடன் மாற்றியமைக்கும் பணியினை இதுவரை இந்திய ரயில்வே துறை முயலவில்லை.
இந்நிலையில், தற்போது தான் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 4 ரயில் நிலையங்களை தேர்வு செய்து அவற்றை புதுப்பித்து பல அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இந்த ரயில் நிலையங்களை விமான நிலையங்களை போல தரம் உயர்த்துவது தான் அரசின் நோக்கம்.
இதற்காக மத்திய பிரதேசத்தில் உள்ள ஹபிப்ஹான்ச் ரயில் நிலையத்தை ஜெர்மனியின் ஹைடல்பர்க் ரயில் நிலையத்தை போல மாற்ற 450 கோடி ரூபாயும், குஜராத்தின் காந்திநகர் ரயில் நிலையத்திற்கு 250 கோடி ரூபாயும், சூரத் ரயில் நிலையத்திற்கு 650 கோடியும், பெங்களூருவின் பாயப்பனாகளி ரயில் நிலையத்திற்கு 250 கோடியும் ரயில்வே துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நான்கு ரயில் நிலையங்களை தொடர்ந்து மேலும் 11 ரயில் நிலையங்கள் அடுத்த கட்டமாக நவீன மயமாக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த ரயில் நிலையமும் இடம் பெறாதது வருத்தத்தை அளிக்கிறது. சென்னையின் எம்.ஜி.ஆர் செண்டரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களும் நாள்தோறும் அதிகமான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.