ஒரே நாளில் ஓஹோன்னு வாழ்க்கை: வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் அனுப்பிய பேங்க்!.. கடனை அடைக்க லாட்டரியில் பரிசு கொடுத்த கடவுள்..!



The bank sent notice to foreclose the house

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பூக்குஞ்சு. இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டை கட்டுவதற்காக கருணாகபள்ளி பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் ரூ.9 லட்சம் வீட்டுக்கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அவரால் கடனை திருப்பி செலுத்த வங்கி நிர்ணயித்த காலக் கெடுவுக்குள் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால், வட்டிக்கு மேல் வட்டி அதிகரித்ததுடன், கடனுக்கு ஈடாக அவரது வீட்டை கையகப்படுத்த வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  இதற்கான நோட்டீஸ் பூக்குஞ்சின் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இத்ற்கிடையே, அன்று மாலை அவரை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட அவரது சகோதரர், பூக்குஞ்சு வாங்கியுள்ள ஏ.இசட்.907042 என்ற எண் கொண்ட அட்சயா லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அடுத்த நாள், அவரது வீட்டை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பிய அதே வங்கிக்கு, தனது பரிசு தொகையை பெறுவதற்காக சென்றுள்ளார். ஏறக்குறைய ரூ.10 லட்சம் என்ற அளவில் பாக்கி இருந்த கடன் தொகையை அடைத்து விடவும் , சிறிய அளவில் தொழில் தொடங்கவும் பூக்குஞ்சு முடிவு செய்துள்ளார்.