திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மும்பையில் பரபரப்பு... கடலில் மீட்கப்பட்ட பெண் சடலம்.. கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.!
மும்பையின் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மும்பையின் வர்லி கடற்கரை பகுதியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக அங்கிருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கடலில் மிதந்து கொண்டிருந்த துப்பாக்கி பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்தப் பைக்குள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று இருந்தது.
அந்த சடலம் அழுகிய நிலையில் கை கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் காயங்களை வைத்து பார்க்கும் போது அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு கடலில் வீச போட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர். உடலை கைப்பற்றிய காவல் துறை பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்றும் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.