ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்.! 16 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்புப் பணி.! இறுதியில் கிடைத்த வெற்றி.!



The boy who fell into the deep well was rescued safely

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. நாகாராம் தேவசி என்பவருக்குச் சொந்தமான இந்த ஆழ்துளை கிணற்றில் அவரது 4 வயது மகனான அனில் தேவசி தவறி விழுந்துவிட்டான்.

இதனையடுத்து இதுதொடர்பாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்பதற்கு எடுக்கப்பட்ட முதல்கட்ட நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கிணற்றுக்குள் 90 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதால், கேமரா ஒன்று உள்ளே இறக்கப்பட்டு, சிறுவன் மயக்கம் அடையாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

young boy

இதனையடுத்து இரவு நேரம் ஆனதால் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அதிகாலை வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த மீட்புப் பணியில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.