கணவர் வாங்கிய லஞ்சம்.! நொடிப்பொழுதில் பறிபோன மனைவியின் மேயர் பதவி.!



The bribe taken by the husband. Wife's mayoral post lost

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முனேஷ் குர்ஜார் என்ற பெண் மேயராக இருந்துவந்துள்ளார். அவரது கணவர் சுஷில் குர்ஜார். பெண் மேயரின் கணவர்சுஷில் குர்ஜார் நிலக் குத்தகை வழங்குவதற்கு ரூ.2 லட்சம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில்,  அந்த பெண் மேயரின் கணவரான சுஷில் குர்ஜார் நிலக் குத்தகை வழங்குவதற்கு  வீட்டில் வைத்து ரூ.2 லட்சம் லஞ்சமாக வாங்கியுள்ளார். லஞ்சம் வாங்கியபோது அவரின் மனைவி முனேஷ் குர்ஜார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, லஞ்சம் வாங்கிய சுஷில் குர்ஜாரை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் அவரை வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும்  அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து, அவரது உதவியாளர்கள் வீட்டிலும் ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் லஞ்சம் வாங்குவதில் பெண் மேயருக்கு  தொடர்பு இருந்ததாகவும், வழக்கில் தலையிடக் கூடும் என்பதாலும் அம்மாநில அரசு அவரை இரவோடு இரவோக பதவிநீக்கம் செய்தது. அவரது மேயர் பதவி நீக்கப்பட்டதோடு அவரின் கவுன்சிலர் பதவியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது.