"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
செல்போனுக்கு ஆசைப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; நண்பன் என்று நம்பி ஏமாந்த பரிதாபம்..!!
செல்போன் வாங்கி தருவதாக கூறி சிறுமையை ஏமாற்றி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி நகரை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், ஆண் ஒருவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி, அந்த ஆண் நண்பரிடம், தனக்கு செல்போன் வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளதாக கூறி இருக்கிறார். அப்போது அந்த நண்பர், உனக்கு நான் செல்போன் வாங்கி தருகிறேன் எனக் கூறி, ஹுப்பள்ளி நகருக்கு சிறுமியை அழைத்துள்ளார்.
அந்த நண்பர் செல்போன் வாங்கித்தருவார் என்று அந்த சிறுமி ஹுப்பள்ளிக்கு, நேற்று மாலை சென்றுள்ளார். அப்போது அந்த நண்பர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் என மொத்தம் 4 பேர் ஒரு அறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின்னர் சிறுமியை மிரட்டி, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற சிறுமி, மிகவும் சோகமாக இருந்துள்ளார். சிறுமி சோகமாக இருப்பதை கவனித்த பெற்றோர், சிறுமியை விசாரித்துள்ளனர்,
இதைத் தொடர்ந்து சிறுமி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், குற்ற செயலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைதுசெய்தனர். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.