திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
11 சிறுமிகளை சீரழித்த தலைமை ஆசிரியர்..!! 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்..!!
ஒடிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டம் லெப்ரிபாரா பிளாக்கில் இயங்கிவரும் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மீது 11 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணை சுந்தர்கர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.47 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிபதி மகேந்திர குமார் சுத்ரதர், குற்றவாளி. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
கடந்த 2016 முதல் சிறையில் இருந்துவரும் முன்னாள் தலைமை ஆசிரியர் 7 வருடங்கள் சிறைதண்டனையை அனுபவித்து உள்ளதால், இன்னும் 3 வருடங்கள் கழித்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்பது கூறிப்பிடத்தக்கது.