மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிகிச்சைக்கு வந்த ரவுடியை அடித்தே கொன்ற மருத்துவர்.. அதிர்ச்சி பின்னணி.!
பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டம் ரூப்நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல ரவுடியான சந்தனகுமார் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர் அஜீத் பஸ்வான் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் ரவுடி சந்தனகுமார் மருத்துவரை தாக்கவே பதிலுக்கு மருத்துவர் அஜித் பஸ்வானும் ரவுடியை தாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவமனை ஊழியர்களும் ரவுடியை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் சந்தனகுமார் மயங்கி விழுந்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததை அடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பவ இடத்திலே ரவுடி சந்தனகுமார் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இந்நிலையில் ரவுடி சந்தனகுமார் அடித்து கொலை செய்த மருத்துவமனை மீது ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் இருக்கும் குடிசைகளுக்கும் தீ வைத்து எறித்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் சிகிச்சை பெற வந்த ரவுடியை அடித்து கொன்று தலைமறைவான மருத்துவர் அஜித் பஸ்வான் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வந்த ரவுடியை மருத்துவர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.