#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடுமையிலும் கொடுமை... சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளியின் கிட்னியை திருடிய மருத்துவர்.... பின்பு வெளியான அதிர்ச்சி தகவல்..!
பீகாரின் முசாஃபர்மூர் நகரில் வசிப்பவர் சுனிதா. இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் வயிறு வலி ஏற்பட்டு அருகிலுள்ள ஆர்.கே.சிங் என்ற மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஆர்.கே.சிங் சுனிதாவுக்கு கர்ப்பப்பையில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சுனிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை முன்பை விட மோசமாகி உள்ளது. இதனையடுத்து உறவினர்கள் சுனிதாவை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் காணவில்லை என்று பகிர் தகவலை கூறியுள்ளனர் மருத்துவர்கள்.
இதனைத் தொடர்ந்து சுனிதா பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்துக்கு மாற்றப்பட்டு மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். சுனிதாவின் இந்நிலைக்கு காரணமான மருத்துவர் ஆர்.கே.சிங் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டி ஒன்றை அளித்த சுனிதா என்னுடைய இரண்டு கிட்னிகளையும் திருடிய மருத்துவரின் கிட்னியை மாற்று சிகிச்சை மூலம் எனக்கு பொருத்த வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் என்னுடைய 3 குழந்தைகளை காப்பாற்றுவதற்காக நான் உயிர் பிழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பணத்துக்காக ஏழைகளின் உயிருடன் விளையாடும் பேராசை பிடித்து மருத்துவர்கள் அனைவருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று சுனிதா கூறியுள்ளார்.