சூப்பர் மக்களே.! அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம்.!



The first village where everyone was vaccinated


நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் பலரும் தடுப்பூசி போடுவதற்கு தயங்கிவந்த நிலையில், தற்போது அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன்வந்துள்ளனர்.

அதற்க்கு காரணம் தற்போது கொரோனாவிலுருந்த தம்மை காப்பாற்றிக்கொள்ள மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க பல மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள வேயான் என்ற கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை வேயான் கிராமம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.