மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேலை அணிந்துகொண்டு தாலி கட்டிய மணமகன்.! ஆந்திராவில் நடைபெற்ற வினோத திருமணம்.!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிச்சர்லபள்ளி கிராமத்தில் அங்கையா என்ற நபருக்கும், அருணா பெண்ணிற்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் அங்கையா பெண் போல சேலை அணிந்தும், மணமகள் அருணா ஆண் போல் குர்தா பைஜாமா உடை அணிந்துகொண்டு கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
அந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் இதுபோன்ற பாரம்பரிய முறை கடைபிடிக்கப்படுகிறது. மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும் என்பதே அவர்களது பாரம்பரிய முறை.
தற்போதைய வாழ்க்கைமுறையில் நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களது திருமணப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.