திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரண்டரை வயது சிறுவனுக்காக 10 வயது சிறுவனை நரபலி கொடுத்து கொன்ற பயங்கரம்..!
மாயமான சிறுவன் வயல் வெளியில் நரபலி கொடுக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்ரைச் மாவட்டம் வர்ஷா கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணா வர்மா. இவரின் மகன் விவேக் (வயது 10). கடந்த 23 ஆம் தேதி சிறுவன் திடீரென மாயமான நிலையில், அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை.
இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடைபெற்ற நிலையில், சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வயலில் பிணமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிறுவன் விவேக் நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
அவரது உறவினர் அனுப் என்பவரின் மகன் இரண்டரை வயது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அந்த குழந்தைக்கு பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் சரியாகவில்லை. இதனால் மந்திரவாதியை அணுகுகையில் சிறுவனை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதன்பேரில் சிறுவன் விவேக்கை அனுப், மந்திரவாதி, அனுப்பின் உறவினர் ஆகியோர் கடத்தி மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.