மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபரீதம்..!!
இளைஞர் ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் அவர் காயமடைந்தார்.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பையனக்கல் பகுதியில் வசிப்பவர் ஹரிஷ் ரஹ்மான் (23). இவர் ரயில்வே ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.
ஹரிஷ் ரஹ்மான் நேற்று வழக்கம்போல் கோழிக்கோட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்ற பொழுது, அவரது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.
திடீரென செல்போன் வெடித்ததில் அவரது பேன்ட் தீப்பிடித்ததால் ஹரிஷ் ரஹ்மான் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து ஹரிஷ் ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி திருச்சூரைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, செல் போன் வெடித்ததில் உயிரிழந்தது குறிப்பிட்டதக்கது.