மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் தொழிலதிபர் முன்பு ஆபாச சேட்டை!.. கார் டிரைவரை பொறி வைத்து பிடித்த போலீசார்..!
காரில் பயணம் செய்த அமெரிக்க பெண் தொழிலதிபர் முன்பாக ஆபாச சேட்டைகளை செய்த கார் டிரைவரை மகாராஷ்டிரா காவல்துறையினர் ஒரு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து 40 வயதான பெண் தொழிலதிபர் ஒருவர், பணி நிமித்தமாக இந்தியா வந்து மும்பையில் வசித்து வருகிறார். வேலை காரணமாக அந்தேரி மேற்கு பகுதிக்கு சென்றவர், தனது வேலையை முடித்துக் கொண்டு தனியார் காரில் மும்பைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை யோகேந்திர உபாத்யாய் (40) என்பவர் ஓட்டி வந்தார். காரின் பின்னிருக்கையில் அமெரிக்க பெண்ணின் நண்பர்கள் அமர்ந்திருந்ததால், அந்த பெண் ட்ரைவர் சீட் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.
நண்பர்கள் ஒவ்வொருவராக குறிப்பிட்ட இடங்களில் இறங்கிய நிலையில், அந்த காரில் அமெரிக்க பெண்ணும், கார் ட்ரைவர் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில், காரை வேகமாக ஓட்டிச் சென்ற ட்ரைவர், காரை ஓட்டிக்கொண்டே தனது அந்தரங்க உறுப்புகளை காட்டி ஆபாச செயல்களை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஜே.பி.சாலையில் காரை நிறுத்த சொல்லி, காரை விட்டு இறங்கி, அங்கிருந்தவர்களிடம் கார் ட்ரைவரின் ஆபாச செய்கை பற்றி கூறினார்.
இந்த தகவலறிந்த டி.என்.நகர் காவல்துறையினர், கார் ட்ரைவர் யோகேந்திர உபாத்யாயை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், காரில் ஆபாச செய்கைகளை காட்டிக் கொண்டு வந்தவர், கோரேகான் பகுதியைச் சேர்ந்த கார் ட்ரைவர் யோகேந்திர உபாத்யாய் (40). அவர் மீது, ஐபிசி பிரிவுகள் 354ஏ, 509, போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.