மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடவுள் ரூபத்தில் வந்த காவலர்.. இளைஞருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு.. சிபிஆர் சிகிச்சை அளித்து சுவாசத்தை கொண்டு வந்த போக்குவரத்து காவலர்..!
பேருந்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து காவலர் சிபிஆர் சிகிச்சை அளித்து இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறி உள்ளது.
தெலுங்கானாவில் ரங்கரா ரெட்டி மாவட்டம் ராஜேந்திர நகரில் அரசு பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த அரசு பேருந்தானது ஆரா நகர் என்ற பகுதியில் வந்தபோது அந்த இளைஞருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறி உள்ளது.
இதனையடுத்து உடனடியாக அந்த பேருந்தானது நிறுத்தப்பட்டது. அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் விரைந்து வந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிர்க்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர்க்கு சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் அந்த இளைஞருக்கு சுவாசம் திரும்பியதும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.