திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பொட்டு வைத்து பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த துயர முடிவு... ஆசிரியை மற்றும் முதல்வர் கைது.!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆசிரியையும் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று பள்ளி சென்று அவர் சீக்கிரமே வீட்டிற்கு திரும்பி விட்டார். இது குறித்து பெற்றோர் கேட்டபோது பொட்டு வைத்து சென்றதால் காலை வணக்கக் கூட்டத்தில் ஆசிரியை அடித்ததாக தெரிவித்திருக்கிறார்.
பின்னர் தனது அறைக்குள் சென்ற மாணவி நீண்ட நேரமாக திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அரை கதவை உடைத்து பார்த்திருக்கின்றனர். அப்போது தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவியின் உடலை சோதனை செய்தபோது அதில் கடிதம் ஒன்று இருந்திருக்கிறது அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் பள்ளியின் ஆசிரியை தான் என மாணவி குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியையும் பள்ளியின் முதல்வரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.