திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காதலை கைவிட மறுத்த சகோதரி தலை துண்டித்து கொலை... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் சகோதரியை கொலை செய்து அவரது தலையை பிளாஸ்டிக் பையில் போட்டு எடுத்து வந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஃபதேபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆசிபா மற்றும் ரியாஸ். சகோதர சகோதரிகளான இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் ஆசிபா அதே பகுதியைச் சேர்ந்த சந்த் பாபு என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.
இது ரியாசுக்கு பிடிக்கவில்லை. ஆயினும் அவரது சகோதரி காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ் தனது சகோதரியின் தலையை துண்டாக வெட்டி அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு சாலை வழியாக எடுத்துச் சென்றிருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் ரியாஸ் கைது செய்து அவரிடம் இருந்த உடல் பாகங்களை மீட்டனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது சகோதரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் உடலும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ரியாஸ் சகோதரியின் தலையை கையில் வெட்டி எடுத்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.