மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைத்த ஆசிரியர்கள்... 7 வயது சிறுமி பரிதாப பலி... நடந்தது என்ன.?
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கட்டாயப்படுத்தி பரீட்சை எழுத வைக்கப்பட்ட ஏழு வயது சிறுமி உயிரெழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுத்திருக்கிறது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்திருக்கிறார். அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு பள்ளியிலேயே வாந்தி எடுத்துள்ளார். ஆயினும் ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு அல்லது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.
கட்டாயமாக கணக்கு பரிட்சையை எழுதிவிட்டு செல்ல வேண்டும் என்று மாணவியை வற்புறுத்தி எழுத வைத்துள்ளனர். தேர்வு முடிந்ததும் தான் மாணவியை மருத்துவமனைக்கு செல்ல அனுமதித்திருக்கின்றனர் அங்கு சென்ற மாணவி மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.
இது தொடர்பாக குற்றம் சாட்டியிருக்கும் பெற்றோர் தங்களது மகளின் இறப்பிற்கு பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும் அவரை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைத்ததால் தான் அன் மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.