மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரீல்ஸ் மோகத்தால் பறிபோன கல்லூரி மாணவர்களின் உயிர்... ரயிலில் அடிபட்ட கொடூரம்..!
ரீல்ஸ போட வீடியோ எடுத்த இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் இருவரின் உடல்கள் கிடப்பதாக ஷாஹ்தாரா காவல் நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை மாலை 4.35 மணிக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 2 உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்தவர்கள் இரண்டு பேரும் கல்லூரி மாணவர்கள் என்றும், இருவரும் ரீவ்ஸ் போடுவதற்காக ரயில் தண்டவாளத்தில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கொண்டிருந்தபோது ரயில் மோதி உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் காந்தி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த வான்ஷ் சர்மா (23) மற்றும் மோனு (20) என்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில், ஷர்மா பி.டெக் மூன்றாம் வருடம் படித்து வந்தார்.
மோனு, டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை கல்வியில் பி.ஏ படித்து வந்துள்ளார். மேலும் இவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தண்டவாளத்தில் நின்று மெய்மறந்து ரீல்ஸ் போட, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, இவர்கள் மீது ரயில் மோதி ஏற்பட்டுள்ளது.