மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலியின் கணவரை துப்பாக்கியால் சுட்ட டிவி நடிகர் கைது... காவல்துறை புலன் விசாரணை.!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உதவி மேலாளரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த டிவி நடிகரின் உதவி மேலாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டிவி நடிகரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ஹிந்துஜா தெர்மல் பவர் பிளான்ட் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் சித்தார்த் தாஸ்(49) என்பவருக்கும் கிரந்தி ஸ்மிதா (42) என்பவருக்கும் திருமணம் முடிந்து 17 வயதில் மகனும் 13 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு இடையே அணை விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கிரந்தி ஸ்மிதா தனது மகன் மற்றும் மகளுடன் டிவி சீரியல் நடிகர் மனோஜ் நாயுடு (35) என்பவரின் சமீர்பேட்டை செலிபிரிட்டி ரிசார்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். மனோஜ் நாயுடு மற்றும் கிராந்தி ஸ்மிதா இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி தனது மகனை தந்தையை பார்ப்பதற்காக விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
அப்போது மகன் தனது தந்தையிடம் தாய் மற்றும் அவரது காதலன் மனோஜ் நாயுடு ஆகியோர் தன்னையும் தனது சகோதரியையும் கொடுமை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த்தாஸ் செலிபிரிட்டி ரிசாரத்திற்கு வந்து கிராந்தி ஸ்மிதா உடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது இதனைப் பார்த்த மனோஜ் நாயுடு கோபத்தில் தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து சித்தார்த் தாஸை நோக்கி சுட்டு இருக்கிறார். இதிலிருந்து தப்பித்த சித்தார்த் தாஸ் காவல்துறையை தொடர்பு கொண்டு நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார் . உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவரிடமும் விசாரணை நடத்தி மனோஜ் நாயுடுவை கைது செய்தனர். மேலும் அவரது துப்பாக்கி மற்றும் அதில் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.